Breaking

Bairavaa and Remo is loss to Ours : Says producers


அண்மை காலமாக சரியாக ஓடாத படங்கள் கூட லாபம் என்று படக்குழு கூறிவருவதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்ருக்கின்றன.
இந்நிலையில் பைரவா படத்தை வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிரடி டுவிட் செய்துள்ளார்.
அதில் அவர் பைரவா படத்தை ரூ. 2.25 கோடி கொடுத்து வாங்கினோம், எங்களுக்கு ரூ. 1.75 கோடி நஷ்டம். ஆனால் நடிகர் விஜய் பைரவா படம் லாபம் என்று படக்குழுவினருக்கு தங்க செயின் கொடுத்திருக்கிறார் என டுவிட் செய்துள்ளார்.

கோலிவுட்டையே அச்சுறுத்தியுள்ளது திருப்பூர் சுப்ரமணியத்தின் வாட்ஸ் அப் கருத்து ஒன்று. இவர் எப்போதுமே நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதை நிறுத்துங்கள் என கூறிவருகின்றார்.
ஆனால், யாருமே அதை கேட்பது இல்லை, அதிக லாபம் சம்பாதிக்க அதிக பணத்தை போட்டு படத்தை எடுத்து அதிக தொகைக்கு விற்று கடைசியில் நஷ்டத்தை தான் அடைகின்றனர்.
இதற்கு அவர்களாகவே சக்சஸ் மீட்டும் வைத்துக்கொள்கிறார்கள், இந்நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் வாட்ஸ் அப்பில் ஒரு கருத்தை கூறியுள்ளார்.
இதில் ‘தற்போது வருகின்ற எந்த ஒரு படமும் லாபத்தை தரவில்லை, கபாலி, பைரவா, சிங்கம்3, போகன், தொடரி, கத்திசண்டை என பல படங்கள் தோல்வி தான்.
பிரமாண்ட வெற்றி என சொல்லப்பட்ட ரெமோ கூட 2 ஏரியாக்களில் தோல்வி தான் அடைந்தது’ என கூறியுள்ளார், இதுக்குறித்து தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உடனே ஏதாவது முடிவெடுக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் கூறிவருகின்றனர்.

1 comment:

  1. this is real news to vijay fans idiots

    ReplyDelete

Powered by Blogger.