Breaking

Teacher Losed 19 Laks for Mobile Message

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி ஜெயந்தி.
கண்ணன் பரமக்குடி ரயில்நிலைய கிளர்க்காகவும், அவரது மனைவி, ஜெயந்தி பள்ளி ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில், ஜெயந்தி செல்போன் நம்பருக்குஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், உங்களுக்கு ரூ. 90 லட்சம் பரிசு விழுந்துள்ளது எனவும், அந்த பரிசை வாங்க வேண்டுமானால், நீங்கள் 20 லட்ச ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மெசேஜைப் பார்த்த ஜெயந்திக்கு, 90 லட்சம் பரிசா? என ஆசையில், 27 தவணை முறையாக ரூ.19 லட்சத்து 33 ஆயிரத்து 620 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், அந்த மெசேஜில் வந்த செல்போன் நம்பரை தொடர்பு கொள்கையில், தான் தெரியவந்துள்ளது நாம் எமாற்றப்பட்டிருக்கிறோம் என்று.
இதனால், மிகுந்த அதிர்ச்சியடைந்த ஜெயந்தி தன் கணவரிடம் நடந்தவறை கூறி பொலிசில் புகார் செய்துள்ளார்.
புகாரைப் பெற்ற பொலிசார், தொண்டியை சேர்ந்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்களாவது, உஷாராக இருங்கள், உங்களுடைய செல்போன் எண்ணிற்கு இது போன்ற மெசேஜ் மற்றும், அழைப்பு வந்தாலோ ஏமாந்து விடாதீர்கள்

No comments:

Powered by Blogger.