Breaking

Maragadha Naanayam Movie Review


கதைக்களம்

கதையின் ஹீரோ ஆதி வேலை கிடைக்காமல் பணத்திற்காக நண்பனுடன் சேர்ந்து சிறு சிறு கடத்தல்களில் ஈடுபடுகிறார். பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கிறது.
மரகத நாணயம் பற்றி கேள்விப்பட்டு அதன் மீதுள்ள மோகத்தால் வெளிநாட்டுக்காரர் ஒருவர் அதை எடுக்க கூலிப்படையை நாடுகிறார். ஆனால் மரகத நாணயம் என்றதுமே எல்லோரும் பின்வாங்குகிறார்கள்.
அதை தொட்டவர்கள் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரையும் பயம் காட்டுகிறது. கடைசியில் இந்த ஆர்டர் மைம் கோபி மூலம் ஆதிக்கு கிடைக்க இவர்நா ணயத்தை எடுப்பதற்காக அதை தேடி அலைகிறார்.
பல உண்மைகள் அப்போது வெளிவருகிறது. மரகத நாணயம் எப்படி வந்தது ? அதன் பின்னணி என்ன, ஆதியின் கைக்கு அது கிடைத்ததா, அவர் உயிருக்கு ஆபத்து வந்ததா என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ ஆதி தமிழில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என இம்முறையும் முயற்சி செய்துள்ளார். பத்திரிக்கைகளில் வெளிவந்த கதையாக இருந்தாலும் ஆதி தைரியமாக இறங்கியுள்ளார். மரகத நாணயத்தை பற்றிய துணுக்குகள் நம்பூதிரி கோட்டா ஸ்ரீநிவாச ராவ் மூலம் கிடைக்கிறது.
ஹீரோயின் நிக்கி கல்ராணி என்றாலும் அவரது வேடம் வழக்கமான படங்களில் இருப்பது போல இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் செல்கிறது. ஏற்கனவே திருமணமான இவர் மீது காதல் வயப்படும் ஆதி ஒரு விசயத்துக்காக அவருடன் இணைவது ஒரு ட்விஸ்ட்.
ஆனந்த ராஜ் வில்லனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் காமெடியில் இறக்கிவிடப்படுகிறார். சீனியர் ஆர்டிஸ்ட் என்பதை நிரூபித்து விட்டார். ஹீரோவின் நண்பர் டேனியும் கதையின் லீட்.
அதிகமான படங்களில் நடித்து வரும் முனீஸ்காந்த் ராம்தாஸ் இப்படத்திலும் தன் திறமையை காட்டுகிறார். இவரும் அவரது கூட்டாளிகளான சங்கிலி முருகன், அருண்ராஜா காமராஜ் செய்யும் ரகளை அமர்க்களம்.
எம்.எஸ்.பாஸ்கர் சின்ன ரோல் தான் என்றாலும் அவரும் காமெடியை டச் செய்கிறார். முதல் பாதி, இரண்டாம் பாதி என படம் முழுவதையும் நிதானமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

கிளாப்ஸ்

இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும். அறிமுமாக இருந்தாலும் படத்தை சரியாக கொண்டு சென்றிருக்கிறார்.
ஹீரோ ஆதி, அவரது நண்பர், நிக்கி கல்ராணி என அனைவருமே நன்கு நடித்திருக்கிறார்கள். காமெடிக்கு குறைவில்லை. வயிறு குலுங்க சிரிக்க நாங்க கியாரண்டி.
நிக்கியின் மூலம் கதையில் ட்விஸ்ட் வைத்தது அருமை. படத்தில் திகில், காமெடி என கலந்திருப்பதால் அதற்கேற்றவாறு பின்னணி இசை கொடுத்திருப்பது கச்சிதம்.
காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஒரே காட்சியில் வந்தாலும் ஸ்கோர் அள்ளி விடுகிறார்.

பல்ப்ஸ்

ஹீரோயின் இருந்தும் டூயட் இல்லையே என்பது பலரின் வருத்தம்.

ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் சீரியஸ் காட்டியிருக்கலாம் என தோன்றுகிறது.
மொத்தத்தில் மரகத நாணயம் ஓகே. குடும்பத்துடன் சிரித்து ரசிக்கலாம்.
Source : cineulagam

No comments:

Powered by Blogger.