Breaking

Ivan Thanthiran Tamil Movie Review


தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காதது தான். அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்க, அவர்களின் வாழ்க்கையை ஏற்கனவே வேலையில்லா பட்டதாரியில் காட்டியிருந்தாலும், தற்போது கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இயக்குனர் கண்ணனும் தன் பாணியில் இன்ஜினியரிங் மாணவர்களின் வாழ்க்கையை காட்டியுள்ள படம் இவன் தந்திரன், விஐபி வெற்றி இதற்கும் கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி ரிவர்ஸ் இன்ஜினியரிங்கில் புகழ் பெற்றவர்கள். அதாவது ஒரு பொருளை அதேபோல் அப்படியே செய்வதில் வல்லவர்கள். ஒரு நாள் மந்திரி வீட்டில் கேமரா செட் செய்ய போகிறார்கள்.
அதற்கான சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்கள். இதனால் அந்த மந்திரியை ஏதாவது செய்ய வேண்டும் என்று இருவரும் ப்ளான் செய்கிறார்கள்.
அந்த நேரத்தில் தான் மந்திரி பல இன்ஜினியரிங் கல்லூரிகளின் லைசன்ஸை ரத்து செய்து, அவர்களிடம் பணம் பறிக்கின்றார்.
மந்திரிக்கு பணத்தை அள்ளிக்கொடுத்துவிட்டு மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றது கல்லூரி நிர்வாகம். இதனால் ஒரு மாணவன் இறக்கும் நிலை உருவாகின்றது. இதை நேரில் கண்ட கௌதம் கார்த்திக் எப்படி அந்த மந்திரியின் சதி திட்டத்தை வெளி உலகிற்கு கொண்டு வருகிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கௌதம் கார்த்திக்கிற்கு தற்போது தான் கொஞ்சம் நல்ல காலம் ஆரம்பித்திருக்கிறது போல, ரங்கூனை தொடர்ந்து இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பு என்பது தானே அனைத்து காட்சியையும் இழுத்து போட்டு நடிப்பது இல்லை, தனக்கு வராததை அடுத்தவர்களை செய்யவிட்டு நாம் ஒதுங்கி நிற்பதும் புத்திசாலித்தனம் தான் என்பதை கௌதம் உணர்ந்துள்ளார்.
ஷ்ரத்தா தனக்கான கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். கௌதம் கார்த்தி- ஷ்ரத்தாவின் காதல் காட்சிகள், அதற்கான வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. வில்லன்களாக சூப்பர் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா என ஸ்டண்ட் மாஸ்டர்களையே பயன்படுத்தியது புத்திசாலித்தனம்.
ஆர் ஜே பாலாஜி 10 படம் நடித்தால் அதில் 4 படத்தில் தான் காமெடி நன்றாக க்ளிக் ஆகும். அப்படி க்ளிக் ஆகியுள்ளது இவன் தந்திரன், ஹேராம் பட ஹீரோயின் உதடு மாதிரி இருக்கு, OLA ஆட்டோ வந்ததால் உங்க வியாபாரம் போச்சா...அதுக்கு தான் மீட்டர போட்ருக்கனும், கழுத்துல அடிப்பட்டால் நீ என்ன எம்.ஜி.ஆரா.. இவன் அம்பானி, அவ ஹர்பஜன் சிங் வேலை முடிஞ்சதும் கட்டிப்பிடிக்க போறாங்க என இன்றைய ட்ரண்ட் மிமி கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக பல டயலாக் அமைந்துள்ளது.
தற்போது மெஜாரிட்டியை டார்க்கெட் செய்து அதில் வெற்றி பெறுவது தான் டெக்னிக். அதேபோல் தான் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவர்கள், படிக்கும் போதே பணம் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவர்கள் நிலை என இன்றைய இளைஞர்கள் போராட்டத்தை அழகாக காட்டியதற்காகவே கண்ணனை பாராட்டலாம். ஆனால், ஜெண்டில்மேன், வேலையில்லா பட்டதாரி படங்களின் சாயல்களை தவிர்க்க முடியவில்லை.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பட்ஜெட் பிரச்சனையா என்று தெரியவில்லை, இரவு நேரத்தில் வரும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் குறும்படம் போல் உள்ளது. தமனின் பின்னணி இசை மிரட்டல், பாடல்கள் பெரிதும் கவரவில்லை.

க்ளாப்ஸ்

கதைக்களம், இன்று தமிழகத்தில் மட்டுமின்றி முன்பே கூறியது போல் இந்தியா முழுவதும் நிகழும் காமன் பிரச்சனை.
கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி கூட்டணி ரசிகர்களின் பேவரட் கூட்டணியாகும்.
படத்தின் காதல் காட்சிகள், கமர்ஷியல் படங்கள் என்றாலே வலுக்கட்டாயமாக இருக்கும் தருணத்தில், கதையுடன் வருவது கவர்கின்றது.

பல்ப்ஸ்

ஒரு சில படங்களின் சாயல் பல இடங்களில் தெரிகின்றது.
லாஜிக் மீறல்கள் பல இடங்களில் ஒரு காட்சியில் பணம் கட்டாததால் என்னால் தேர்வு எழுத முடியவில்லை என்று ஷ்ரத்தா கூறுகின்றார். ஆனால், அதற்கு முந்தைய காட்சியில் தான் கௌதம் அவருடைய தேர்விற்கு பணம் கட்டி வருகின்றார்.

மொத்தத்தில் இந்த பிரச்சனையை எந்த காலக்கட்டத்திற்கு எடுத்தாலும் பொருந்தும் என தந்திரமாக திரைக்கதை அமைத்த கண்ணனே ரியல் தந்திரன்

Source : Cineulagam 

No comments:

Powered by Blogger.