Breaking

Bindu Madavi Says I am Vijay Fan

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 16- வது பிரபலமாக பிந்து மாதவி உள்ளே சென்றார், இவர் சென்றவுடன் காயத்ரியை ஜூலியையும் கேள்விகளால் துளைத்து எடுத்தார்.

இது ஓவியா ஆர்மியினருக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் பிந்துவை பிடிக்க செய்தது, இவர் அவ்வளவாக ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் இவர் வையாபுரி ஆரவ், ஹரிஷ் ஆகியோருடன் சேர்ந்து செய்த கலாட்டாக்கள் ரசிக்க வைத்தது.

இந்நிலையில் 100 நாட்கள் முடிவடைய இரண்டு நாட்கள் இருக்கும் போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் ட்விட்டரில் புதிதாக கணக்கை தொடங்கி ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர்கள் இவரிடம் நீங்கள் எந்த நடிகரின் ரசிகை என கேட்க தளபதி விஜயின் தீவிர ரசிகை என கூறியுள்ளார்.

மேலும் ஓவியாவை பற்றி கேட்டபோது நல்ல பெண்மணி, நானும் ஓவியா ஆர்மியில் உள்ள நபர் தான் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹரிஷுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.


Source : Kalakkalcinema

No comments:

Powered by Blogger.