Breaking

Bramma.com Movie review


கதைக்களம்

ஹீரோவான நகுல் இக்கால இளைஞனுக்கான கனவுடன் இருக்கிறார் என்பதை விட கனவுக்குள் மிதக்கிறார் என்றே சொல்லலாம். சாதாரண குடும்பத்தில் இருந்து ஒரு சொகுசு வாழ்க்கை அடைய நினைக்கிறார்.
அவருக்கு அம்மாவாக நடிகை கௌசல்யா. வழக்கமான குடும்பம் போல தான் இவர்களும். மகன் மீது அதிக அக்கறை காட்டும் அம்மா, எதார்த்தமான அப்பா, ஒரு தங்கை என கதை நகர்கிறது.
இப்படியிருக்க ஒருநாள் கோவிலுக்கு செல்ல எதிர்பாராத விதமாக அவரின் வாழ்க்கையில் பல மாற்றம். நடப்பது கனவா இல்லை நிஜமா என அவருக்கே பெரும் குழப்பம்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் மாயாஜாலம் போல உடனே உடனே அவரின் முன் தோன்றுகிறது. அதிர்ச்சியுடன் அவரது நண்பன் ஜெகன் உதவியுடன் நடப்பது என்ன என அவரின் கவனம் திசை திரும்புகிறது.
இதற்கிடையில் மானசாவாக வரும் நடிகை ஆஸ்னா சாவேரி மீது காதல் வருகிறது. ஆனால் நடக்கும் நிகழ்வுகளால் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு புரியவில்லை.
இப்படியே போக தன்னை யாரோ வாட்ச் பண்ணுகிறார்கள் என எந்தநேரமும் அலர்ட்னஸ் உடன் அவரின் ஒவ்வொரு பொழுதும் நகர்கிறது. அவருக்கு நடப்பது என்ன அமானுஷ்யமா இல்லை வேறு எதுவுமா என்பதை சொல்வது பிரம்மா டாட் காம்.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ நகுல் ஒரு சில படங்களில் நடித்து ரீச்சானவர். நீண்ட நாளுக்கு பிறகு ஸ்கீரினில் வந்திருக்கிறார். ஆடம்பர வாழ்க்கை, அமைதியான அணுகுமுறை என படத்தில் இவர் இருவிதமான ரோல் பிளே செய்வது போல இருக்கும்.
ஆரம்பத்திலேயே பாட்டு ஒன்று தான் இவரின் பின்னணியை எடுத்து சொல்கிறது. நடித்திருக்கிறார். ஆனால் அவரின் மற்ற படம் போல தான் தெரிகிறது.
ஹுரோயின் ஆஸ்னாவுக்கு பெரிதளவில் எல்லாம் ரோல் கொடுக்கப்படவில்லை. ஹீரோயின் அவ்வளவு தான். ஆனாலும் ரோலுடன் ஒத்து போகிறார்.
ஆக்‌ஷன், காதல், ஹாரர் என படங்களை பார்த்தவர்களுக்கு இப்படம் புதியதாக தெரியும். ஆனால் நூல் பிடித்தது போல கவனம் செலுத்தினால் தான் முழுமையாக புரியும்படியான காட்சிகள்.
காமெடிக்கு நடிகர் ஜெகன். அவர் எப்போதும் போல தான் இப்படத்திலும். நவீன காமெடியை புகுத்துவார். ஆனால் பெரிதளவில் முக்கியதுவம் கொடுக்கப்படவில்லையோ என தோன்றலாம்.
திருவிளையாடல், நவீன சரஸ்வதி சபதம் போல ஒரு சிம்பிள் விசயத்தை நவீனமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். கடவுள், சமூகவலைதளம், மனிதன் என மூன்று விசயத்தில் கதை சுழல்கிறது.
எனக்கு அது நடக்கவில்லையே, இது நடக்கவில்லையே, என்னை ஏன் படைத்தாய் ஆண்டவா என புலம்பும் நம் ஒவ்வொருவரின் நிலைக்கு பின்னால் இருக்கும் விசயத்தை படம் சொல்லும்.

கிளாப்ஸ்

ஆன்மீகம் சம்மந்தமான படத்தை எடுக்க இயக்குனரின் தைரியத்தை பாராட்டலாம்.
நகுல், ஜெகன், ஆஸ்னா எல்லோரும் ஓகே லெவல் தான்.
சொல்ல வந்த விசயத்தை புரியவைப்பதில் உருண்டு பிரண்டிருக்கிறார்கள்.

பல்பஸ்

படத்தை பார்ப்பவர்களுக்கு பொறுமை இருக்குமா என்றால் கேள்வி தான்.
படத்தை சோசியல் கிரைம் போல டச் செய்து பின் வேறெங்கோ செல்வது போல உள்ளது.
படத்திற்கும் பாடலுக்கும் தீம்க்கும் ஏதோ மிஸ் ஆனது போல தான்.
இன்னும் பிளானிங் நிறைய செய்திருக்கலாம்.
மொத்தத்தில் பிரம்மா டாட் காம் ஓகே. முழுமையாக பார்க்க கவனம் அவசியம்.. பொறுமையானவர்கள் போகலாம்.

No comments:

Powered by Blogger.