Breaking

Anchor DD and Mynaa Divorce Reasons

டிடி, தாடி பாலாஜி, மைனா நந்தினி, ரம்யா இந்த பெயர்கள் எல்லாம் அடிக்கடி மீடியாக்களில் உலா வருகின்றது.
இதற்கு காரணம் அவர்கள் அனைவரும் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள் என்பதால் மட்டும் அல்ல. கோள்விக்குறியாகியுள்ள அவர்களின் வாழ்க்கையும்தான்.
பிரபல தொலைக்காட்சி தனது தொகுப்பாளர்களுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்கும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்தான் என்றாலும் இந்த தொலைக்காட்சிக்கும், திருமணத்திற்கும் எழாம் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த டிவி ஊரறிய உலகமறிய செய்து வைத்த எந்த பிரபலங்களின் கல்யாணமும் மகிழ்ச்சியானதாக நீடிக்க வில்லை. விஜய் டிவி கொண்டாடிய பிரபலங்களின் திருமணங்கள் இறுதியில் விவாகரத்தில் வந்து முடிந்திருக்கிறது.
தொகுப்பாளினியான ரம்யா அபராஜித் ஜெயராமன் என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி திருமணம் செய்தார். இவர்களது திருமண சடங்குகளை டிவியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பி பூரிப்பு அடைந்தது. ஆனால் பாவம், ரம்யா திருமணம் ஆன 1௦ஆவது நாளே கணவரை பிரிந்து விட்டார்.

குறித்த டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் பேசப்பட்ட மைனா என்ற நந்தினியின் திருமணத்தையும் கொண்டாடியது. ஆனால் மைனாவின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். நந்தினி விவாகரத்து கோரியதாலே கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

திருமணத்திற்கு முன்னர் டிடி என்ற பெயரை கேட்டதும் ரசிகர்களின் கூட்டம் அவரின் குரலை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அலையாக திரண்டு விடுவார்கள். டிடிக்கும் அவரது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்துக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி சென்னையில் திருமணம் நடந்தது.
டிடி பணிபுரியும் தொலைக்காட்சியே அவரது திருமணத்தை இரண்டு நாட்களுக்கு கொண்டாடி, அதை ஒளிபரப்பியது. இப்போது டிடி விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது மட்டுமா, தாடி பாலாஜியின் திருமணத்தில் இந்த டிவியின் தலையீடு இல்லை என்றாலும், பாலாஜியின் வாழ்க்கை தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்க்ரீனில் ‘கல கல’ கேரக்டராக தோன்றினார். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் கொடுரமான எண்ணங்களை கொண்டவராக இருந்துள்ளார். அவர் தன் மனைவியையும், குழந்தையையும் கொடுமை படுத்தும் காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இப்படி விஜய் டிவியின் முக்கிய பிரபலங்களின் சொந்த வாழ்க்கை இக்கட்டான முடிவுகளில்தான் முடிந்திருக்கிறது. டி.ஆர்.பி.யை ஏற்றிக்கொள்ள தனது ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது. ஆனால் அதே ஊழியருக்கு தனிப்பட்ட வாழ்வில் பிரச்சினை என்று வரும்போது ஏன் ஒதுங்கிக் கொள்கிறதே என பார்வையாளர்களிடம் கேள்விகள் எழுந்துள்ளன.
திருமணத்தை போட்டு காட்டிய பிரபல தொலைக்காட்சியில் அவர்களை இணைத்து வைக்கவும், அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தவும் ஏன் முயற்சிக்க கூடாது என்பதும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
திருமணத்தை பார்வையாளர்களுக்கு திரையிட்டு காட்டிய பிரபல தொலைக்காட்சியில் ஏன் அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு அடித்தளம் ஈட முடியாதா என்ற வினாவும் எழுப்பப்படுகின்றது.
இல்லை.. இவர்களின் வாழ்க்கையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை போல முடிந்து விட்டதா...? இல்லை மூடி மறைக்கப்பட்டதா... அல்ல இதற்கு பின்னணியில் என்னதான் உள்ளது. எது எப்படி இருந்தாலும் மீண்டும் பாதிக்கப்பட்ட பிரபலங்களின் வாழ்கையில் தீபம் ஏற்றினால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியின்தான்.
பொருத்திருந்து பார்ப்போம் என்ன மாற்றங்கள் நிகழ போகின்றது என்று...

No comments:

Powered by Blogger.